Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்திப்பதை மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா தவிர்ப்பு!

இரு தரப்புகளுக்கி டையே உள்ள பிரச்சனை களில் மனந்திறந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டு மென்று நேபாள வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஜாதா கொய்ராலாவும், இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமாராவும் கூறியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள இடை வெளி அதிகரிக்குமேயானால் மற்றவர்கள், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள் என்று நேபாள அமைச்சர் கூறினார். நேபாள பிரதமர் மாதவ்குமார் நேபாள் இந்தியா சென்றிருந்தபோது, இரு நாடுகளும் ஏற்றுக் கொண்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய ஒப்பந்தம் இக்கூட்டத்தில் இறுதிப்படுத்தப்பட்டது.

இரு நாடுகளின் உறவு ள் மேலும் வலுப்பட இவை உதவிடும் என்று சுஜாதா கொய்ராலா தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளை பலப் படுத்த தனது வருகை உதவியாக இருக்கும் என்று நிருபமா ராவ் காத்மண்டு விமான நிலையத்தில் இறங்கியவுடன் கூறியிருந்தார்.

அண்மைக் காலங்களில் இரு நாடுகளின் உறவுகளில் நெருடல்கள் ஏற்பட்டுள் ளன. சகாஸ்திரா பீமா பால் அமைப்பு நேபாளத்தின் எல்லையில் ஆக்கிரமித்துள் ளதாக நேபாளம் குற்றம் சாட்டுகிறது. இந்தியாவுக்குள் கள்ள நோட்டுக்கள் நேபாளம் வழியாக வருவதும், பசுபதிநாத் கோவிலில் இந்திய பூசாரிகள் தாக்கப் பட்டதும், இந்தியத் தரப்பில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்தியப் பூசாரிகளை சந்திக்கவுள்ளார். 

 
இந்திய வெளியுறவுச் செயலாளரைச் சந்திப்பதை மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா தவிர்த்து விட்டார். பிரச்சந்தா திடீரென்று ஹாங்காங் புறப்பட்டுச் சென்று விட்டார். நான்கு நாள் பயணமாக ஹாங்காங் சென்றுள்ள பிரச்சந்தா வுடன் மாவோயிஸ்ட் கட்சியின் வெளியுறவுத்துறைத் தலைவர் கிருண பகதூர் மஹராவும் சென்றுள்ளார்.

ஹாங்காங்கில் வாழும் நேபாள மக்களுடனும், கட்சியினருடனும் விவாதிப்ப தற்காக பிரச்சந்தா அங்கு சென்றுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் கூறின. ஹாங் காங்கில் வாழும் மக்கள் மற்றும் கட்சியினரின் எண்ணிக்கை சொற்பமானது என்றும், நிருபமா ராவைச் சந்திப்பதை தவிர்க்கவே பிரச்சந்தா ஹாங்காங் சென்று விட்டார் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Exit mobile version