Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனிலும் போராட்டம்!

இந்திய விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைத் திட்டமிட்டு கொள்ளையிடும் மோடி அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக இந்திய அளவில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் லண்டன் இந்தியத் தூதராலயத்தின் முன்பாக கடந்த ஞாயிறு 06.12.2020 நடை பெற்ற மாபெரும் போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதிலிருமிருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்ட இப் போராட்டத்தின் போது பலரை லண்டன் ஸ்கொட்லாந்து யார்ட் போலிஸ் கைது செய்தது.

கொரோனா விதிகளை மீறியமைக்காக 13 போராட்டக்காரர்களை போலிஸ் கைது செய்த அதேவேளை 30 பேருக்கு அபராதமும் விதித்தது.

Exit mobile version