இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மீண்டும் கடுமையாக சரிந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக சரிந்து வந்த ரூபாயின் மதிப்பு இன்று அதிகபட்சமாக ரூ.57.07 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. யூரோ உள்ளிட்ட பிற நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் அமெரிக்க டாலரின் மதிப்பு பெருமளவில் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.56.30 ஆக இருந்தது.
யூரோவின் வீழ்ச்சியே டாலரின் மதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக ஏற்றமாகக் புனையப்படும் நவதாராளவாதப் பொருளாதாரம் இந்தியாவில் இப்போது வேகமான சரிவைச் சந்திக்கிறது. இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் அவலங்கள் நிறைந்த பொருளாதார நெருக்கடியின் ஆரம்பப் புள்ளியே இது.