Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய ரஷ்ய அணுசக்தி ஒப்பந்தம்

அணு சக்தி துறையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்ய பிரதமர் மெத்வதேவ் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

மூன்று நாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்ற மன்மோகன் சிங்கிற்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவருக்கு அதிபர் மெத்வதேவ் விருந்து அளித்து கவுரவித்தார்.

இந்நிலையில், இன்று இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

அதனைத் தொடர்ந்து அணு சக்தியின் ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்கான இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

இந்த கலந்தலோசனையின் முடிவில் அணு சக்தி தொழில்நுட்பம், இந்தியாவின் அணு உலைகளுக்கு தேவையான தடையற்ற யுரேனியம் சப்ளை உள்பட ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்கான அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்குமிடையே விரிவான ஒப்பந்தம் கையெழுத்தானது.அத்துடன் பாதுகாப்புத் துறையிலும் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனை சந்திப்பு முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு மெத்வதேவுடன் கூட்டாக பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் இத்தகவலை தெரிவித்தார்

Exit mobile version