கச்சதீவிற்கு அண்மையில் வைத்து 25 இந்தியக் கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களில் இதுவரை 49 இந்திய மீனவர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மீனவர்களை கரைக்கு கொண்டு செல்லும் போதே ஒரு படகு நீரில் மூழ்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கை இந்திய அப்பாவி மீனவத் தொழிலாளர்களைப் பாதிக்கும் எல்லை மீறல் பிரச்சனை குறித்து இந்திய அரசோ இலங்கை அரசோ கண்டுகொள்வதில்லை. இலங்கை அரச எடுபிடிகளுக்கும் தமிழ் நாட்டு அரசியல் வியாபாரிகளுக்கும் இந்தப் பிரச்சனை நீடிப்பது தேவையானதாகியுள்ளது. இவர்களின் இடையே நசுங்கி மாண்டுபோகும் அப்பாவி மீனவத் தொழிலாளிகளின் வாழ்க்கை தொடர்கதையாகியுள்ளது.