Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மாவோயிஸ்ட்களின் யுக்திகள் குறித்த ஆவணம்:இந்திய அரசு கைப்பற்றல்?

maoinஇந்திய மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களில் யுக்திகள் குறித்த தகவல்களைக் கொண்ட கசிந்த ஆவணம் ஒன்றை இந்திய அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மாவோயிஸ்ட்டுகளின் அதியுயர் நிர்வாக பீடமான பொலிற்பீரோ இதனை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான யுக்திமிக்க இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டு, நடைமுறைப்படுத்துமாறு தமது போராளிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவோயிஸ்டுகளின் இந்த 20 பக்க ஆவணம், தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை நிர்மூலம் செய்வதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் தயாராவதாக கூறுகிறது.

ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருப்பதாக இந்தியாவை குற்றஞ்சாட்டுவதுடன், மாவோயிஸ்ட்டுகள் இந்திய அரசின் சின்னங்கள் மற்றும் குறியீடுகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுமாறும் அந்த ஆவணம் கோருகிறது.

தமது அமைப்பின் போராளிகள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்று கூறுகின்ற மாவோயிஸ்டுகளின் பொலிற்பீரோ, இந்தியாவுக்கு, அமெரிக்காவிடம் இருந்து உதவிகள் கிடைப்பதாகவும், விடுதலைப்புலிகளின் தோல்வியில் இருந்து தாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இராணுவங்களின் யுக்திகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எவ்வாறு அவற்றின் வீழ்ச்சிக்கு வழி செய்கிறது என்பது குறித்து விடுதலைப்புலிகளின் தோல்வியில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த ஆவணம் கூறுகின்றது.

BBC.

Exit mobile version