தலிபான் தீவிரவாதிகளிடம் தப்பிய சம்பவம் தொடர்பாக பானர்ஜி எழுதிய “காபூல்வாலாவின் வங்க மனைவி’ என்ற புத்தகம் 1995 ஆம் வெளியாகி பரபரப்பாக விற்பனையானது. இதை மையமாக வைத்து 2003ஆம் ஆண்டு “எஸ்கேப் ப்ரம் தாலிபான்’ என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அமரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் கிரிமினல்களின் கூடாரமாக மாற்றமடைந்த ஆப்கானிஸ்தானில் கொலைகள் அனைத்துத் தரப்பிலிருந்தும் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகின்றது. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த நாகரீகத்தின் எச்சங்களைக் கூட அழிக்க தலிபான்களும் அமரிக்க ஆக்கிரமிப்புப் படையும் தயங்கவில்லை.
மாகாண தலைநகரான கரானவில் உள்ள இவரது வீட்டுக்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள் இவரின் கணவரையும் வீட்டில் உள்ள மற்றவர்களையும் கட்டுப் போட்டுவிட்டு இவரை சுட்டுக் கொன்றதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பேனர்ஜியின் உடலை அருகேயிருக்கும் மதப் பள்ளிக் கூடத்தின் அருகே அவர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
அதே நேரம் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று தாலிபான்கள் மறுத்துள்ளனர்.