Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் வெறும் உல்லாசப்பயணம் : விக்கிரமபாகு கருணாரத்ன

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டுமென்ற ஆணித்தரமான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்காத இந்திய பாராளுமன்றக் குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப்பயணமாகுமென விமர்சித்துள்ள நவமமாஜக் கட்சி, ஆதிவாசிகளை பார்வையிடுவது போன்று தமிழ் மக்களை இக் குழு பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில் இந்திய, இலங்கை உடன்படிக்கை 1987 இல் கையெழுத்திட்டு அதன் மூலமே 13 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்களையோ அரசியல் தீர்வையோ வழங்கவில்லை.

அதேபோன்று யுத்தம் முடிந்து 3 வருடங் கள் கழிந்தும் மக்கள் தமது சொந்த இடங்களில் இதுவரையில் குடியேற்றப்படவில்லை.

அதிகாரப்பரவலாக்களை வழங்க வேண்டும். மக்களை சொந்த இடங்களில் வாழ வைக்க வேண்டும். உணவு, நிவாரணங் களை வழங்க வேண்டுமென இந்தியக் குழுவினர் ஆணித்தரமாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்திருக்க வேண்டும். இதனை செய்யாமல் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். மக்களை மீள்குடியேற்றவேண்டுமென்ற கோக்கைகளையே முன்வைத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இதற்கு தலையை ஆட்டிவிட்டு எதிர்காலத்தில் எதனையும் செய்யப் போவதில்லை.வழமையாக தமிழ் மக்களை ஏமாற்றும் இந்தியாவின் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆதிவாசிகளை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வருவது போன்று தமிழ் மக்களை பார்வையிடுவதற்கான சுற் றுலாப் பயணமே இந்தியக் குழுவின் விஜயமாகுமென்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version