Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய – நேபாள உறவை சீனாவுடன் ஒப்பிட வேண்டாம் : டில்லியில் பிரச்சந்தா பேச்சு!

16.09.2008.

புதுடில்லி:
இந்தியாவுடனான நேபாளத்தின் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அத்தியாவசியமானது என்றும், இதை சீனாவுடனான நேபாளத்தின் உறவோடு ஒப்பிட வேண்டியதில்லை என்றும் நேபா ளத்தின் புதிய பிரதமரும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புஷ்பகமல் தகால் என்ற பிரச்சந்தா கூறி யுள்ளார்.

நேபாளத்தின் பிரதமராக பொறுப் பேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வந்துள்ள பிரச்சந்தா, டில்லியில் திங்க ளன்று இந்திய தொழில் வர்த்தக கூட்ட மைப்பு மற்றும் அசோசெம் அமைப்புகள் நடத்திய தொழில்துறை தொடர்பான கூட்டத்தில் பேசினார்.

அப்போது, கலாச்சார ரீதியாகவும், வரலாறு மற்றும் பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இந்தியாவும் நேபாளமும் ஒன்றோடு ஒன்று மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன; எனவே இரு நாடுகளின் உறவும் தவிர்க்க முடியாதது, அத்தியாவசியமானது என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் சீனாவுடனும் நாங்கள் உறவுகளை வளர்த்துக் கொள்ள விரும்பு கிறோம்; இந்த இரண்டையும் ஒப்பிட்டு குழப்ப வேண்டியதில்லை என்றும் பிரச் சந்தா குறிப்பிட்டார்.

நேபாள பிரதமராக பொறுப்பேற்ற உடனேயே பிரச்சந்தா பெய்ஜிங் சென்றார். இதுகுறித்து சந்தேக கண்ணோட்டத் துடன் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வி களை அவர் நிராகரித்தார். மேலும், பெய் ஜிங்கிற்கு ஒலிம்பிக் போட்டிகளை காண் பதற்காகவே சென்றதாக தெரிவித்த பிரச் சந்தா, நேபாளத்தில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு தேவை யான அனைத்து பாதுகாப்பையும் அரசு நல்கும் என்றும், இந்தியாவும், நேபாளமும் பாதுகாப்பு விஷயத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக தொழிலதிபர்கள் சார்பில் பிரச்சந்தாவுக்கு வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது. பிரச்சந்தாவுடன் அவ ரது மனைவியும், பல்வேறு துறை அதி காரிகளும் வந்துள்ளனர்.

Exit mobile version