இந்திய நிதி இலங்கை அரசிற்கே வழங்கப்படும் : சிதம்பரத்திற்கு மறுப்பு
இனியொரு...
இனப்படுகொலையின் பின்னர்,இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள் மீது இனச் சுத்திகரிப்பு நிகழ்த்திவரும் இலங்கை அரசாங்கத்திற்கு பணம் வழங்குவது குறித்து தமிழ் நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருந்தது. இந்த எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்திய அரசின் பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்ற சிறுபிள்ளைத் தனமான பொய் ஒன்றைக் கூறியிர்ய்ந்தார். சிதம்பரம் கூறியது உண்மையல்ல என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
சிதம்பரம் கூறியது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அரசினூடாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.