Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் : கொலையாளிகளே அஞ்சலி செலுத்தினர்

modi_2001dec_attack2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 பாதுகாப்பு படை போலீசார் உள்பட 7 பேர் பலியாகினர். தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பலியானவர்களுக்கு இந்திய அரசு நரேந்திர மோடி தலைமையில் இன்று நினைவஞ்சலி செலுத்தியது. 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வஜ்பாய் அரசே திட்டமிட்டு நடத்திய இத்தாக்குதல் நரேந்திர மோடி அரசால் நினைவுக்கூரப்படுகிறது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து கைதான அப்சல்குரு என்ற அப்பாவியை இந்திய நீதிமன்றம் எந்த ஆதாரமும் இன்றித் தூக்கிலிட்டுப் படுகொலை செய்தது. இந்திய நீதித்துறையின் கோரத்தை வெளிப்படுத்தும் இப்படுகொலையின் நினைவுகளை மக்கள் மறந்துபோயினர்.

இனக்கொலையாளி நரேந்திர மோடி அதனை மீண்டும் நினைவூட்டும் வகையில் நாடாளுமன்றத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொலைசெய்தவர்களே அஞ்சலி செலுத்தும் நாடகம் இன்று மேடையேறியது.

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக்கோபுரத் தாக்குதல்களைக் காரணமாக முன்வைத்து உலகம் முழுவதும் இராணுவமயப்படுத்தப்பட்டது. அரசுகளே தாக்குதல்களை நடத்தி பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புத் தொழிலாளர்களைக் கொலை செய்தன.

இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் இந்திய அரசாலும் உளவுத்துறையாலும் திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் தாக்குதலை முன்வைத்துக் கைதுசெய்யப்பட்ட அப்சல்குரு நிரபராதியென்றும் அருந்ததி ராய் ஆதாரங்களுடன் நிறுவினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள் அப்சல் குரு நிரபராதி என்றும் தாக்குதலுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை என்றும் ஆதாரங்கள் வெளியாகின.

இந்திய இந்துத்துவ அரசு திட்டமிட்டு நடத்திய இப்படுகொலையை நரேந்திரமோடி கும்பல் 13 வருடங்களின் பின்னர் இன்று நினைவுகூர்ந்தது.

நடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் உயர் பாதுகாப்பு படை வீரர்களின் உருவப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் உயிர் தியாகம் செய்தவர்களின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அருந்ததி ராய் இன் கட்டுரையின் தமிழாக்கம்:

‘அப்சல் குருவை தூக்கிலிடு
அவனது உயிர் அழிந்து போக வேண்டும்’
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல்
என்ற அதிவிசித்திர கதை
Exit mobile version