
இந்தியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்கள் அகதி முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளிச் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். அடிப்படை மனித உரிமைகள் கூட உத்தரவாதப்படுத்தப்படாமல் கைதிகள் போன்று நடத்தப்படுகின்றனர். இந்த நிலையிலேயே அவர்கள் அகதிகளுக்கு உரிமை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் பணக்கார நாடுகளை நோக்கிப் பயணம் செய்கின்றனர் என்பதை மறைத்து கதைவிடுகிறார் பீரிஸ்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக வேறு அறிவித்திருக்கிறார். ராஜபக்ச குடும்ப அரசின் அடிமை போல செயற்படும் பீரிஸ், அவரது எஜமானர்களுக்கு ஆட்கடத்தலில் உள்ள தொடர்பையும் மறைத்துவிடுகிறார்.