இந்தியா போன்ற நாடுகளில் செயற்கையாகத் திணிக்கப்பட்ட முதலாளித்துவம் உருவாக்கிய வாழ்க்கை முறையின் அவலங்களை இத் திரைப்படம் தந்தை மக்கள் உறவை அடிப்படையாக முன்வைத்து விசாரணை செய்கிறது.
வெளியிட்ட இடங்களில் எல்லாம் இப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ஒரே ஒரு தமிழ்ப்படம் ‘தங்க மீன்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 18-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’ படத்தை குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் மற்ற உலகப் படங்களோடு திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.