இந்தியாவின் குடியேற்ற நாடாக மாறிவரும் இலங்கைக்கு இவரின் வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராஜபக்ச அரசு அளவுக்கு அதிகமாக பெரும் வசதிகளோடு இணைத்துக்கொண்ட இராணுவம், கடற்படை போன்றவற்றிடமிருந்து எதிர் நோக்கும் அதிர்ப்தியை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையில் இந்தியக் கடற்படையின் பிரிவொன்றை அங்கு தங்க வைப்பதற்கான முயற்சிகளில் ராஜபக்ச அரசு ஈடுபடலாம் எனத் தெரிய வருகிறது.
2004 ஆம் ஆண்டின் பின்னர் வெளிப்படையாக இந்திய கடற்படை அதிகாரி இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவை. இன்லங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவே தனது வருகை அமைந்துள்ளதாக அயலண்ட் செய்திப்பதிரிகைக்கு வர்மா தெரிவித்துள்ளார்.
அவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதம மந்திரி ரி எம் ஜெயரத்ன, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், மற்றும் இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திஸார சமரசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார்.