Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய எம்.பிக்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையின் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அனுமதி வழங்கமுடியாது?: லக்ஷ்மன் கிரியெல்ல.

kanimoli வவுனியா அகதி முகாம்களைப் பார்வையிட இந்திய எம்.பிக்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையின் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அனுமதி வழங்கமுடியாது என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

 

 

வவுனியா அகதி முகாம்களைப் பார்வையிட இந்திய எம்.பிக்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையின் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அனுமதி வழங்கமுடியாது  என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

இலங்கை அரசு இலங்கை எதிர்க்கட்சி எம்.பிக்களின் சிறப்புரிமையை இதன் மூலம்  மீறுகின்றது என்று அவர்  சிறப்புரிமைப் பிரச்சினையைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வவுனியா அகதி முகாம்களைப் பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்துஅடுத்த வாரம் 4 எம்.பிக்கள் வருகின்றனர். அவர்களுக்கு அனுமதி வழங்கியவர் யார்? ஆனால், எமது எம்.பிக்கள் அகதிமுகாம்களுக்குச் செல்ல இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த அரசு திட்டமிட்டு எமது சிறப்புரிமையை மீறுகின்றது.

வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றால் எமது மக்களைப் பார்க்க ஏன் எமக்கு  அனுமதி வழங்க முடியாது? இந்த நாடாளுமன்றத்துக்குத் தலைவர் சபாநாயகர் தான். சபாநாயகர் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். எமது சிறப்புரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.  என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர்  இதற்கு நான்தான் அனுமதி வழங்கினேன் என்பதுபோல் பேசுகிறீரே. மக்கள் அவ்வாறுதான் நினைக்கப்போகின்றார்கள்.  என்றார்.

 

Comments

Exit mobile version