வன்னியில் புலிகள் அழிக்கப்பட்டதும் பிரபாகரன் வாழ்கிறார் என்றும் அடுத்தகட்ட ஈழப் போராட்டத்திற்குப் புலிகள் தயாராகிறார்கள் என்றும் போலி விம்பத்தை உருவாக்க இந்திய உளவுத்துறை அவர்களின் அரசியல் அடியாட்களைப் பயன்படுத்திக்கொண்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட விம்பத்தின் ஊடாக குறந்த பட்சம் வன்னிப் படுகொலைகளின் பின்னர் மூன்று வருடங்களாக தமிழ் நாட்டிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்து ஈழப் போராட்டத்தைத் தொடருக்கூடிய புதிய முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கான மக்கள் ஆதரவை அழித்தது. புலிகளிலிருந்து தப்பிவந்த ஆயிரக்கணக்கான போராளிகளும், இனப்படுகொலையின் பாதிப்பிலிருந்து விடுபடாத ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகளும் இந்திய உளவுத்துறையின் முதலாம்கட்ட பிரச்சார வலைக்குள் விழுந்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தமிழ் உணர்வாளர்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டனர். புலம்பெயர் நாடுகளில் ரிசிசி, பீரிஎப் போன்ற அமைப்புக்கள் இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டன.
இதன் இரண்டாவது கட்டமாக பிரபாகரன் குறித்தும் புலிகள் குறித்தும் புனித விம்பம் ஒன்று இந்திய உளவுத்துறையால் கட்டமைக்கப்பட்டது. சீமான், வை.கோ, நெடுமாறன் என்ற அரசியல் வாதிகளின் நீண்ட பட்டியல் இதற்காகத் தயார்படுத்தப்பட்டது.
போராட்டத்தின் தோல்வி தொடர்பான சுய விமர்சனம் மற்றும் விமர்சன அடிப்படையில் புதிய அரசியல் அமைப்புக்கள் தோன்றுவதற்கான வாய்புக்களை தடுப்பதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் அல்லது பிரபாகரனின் புகழ்பாடுவதும், அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதும் மட்டுமே ஈழப் போராட்டம் என்ற சிந்தனைப் போக்கு உருவாக்கப்பட்டது. புலம்பெயர் தேசிய வியாபாரிகள், தென்னிந்திய அரசியல் பிழைப்பு வாதிகள் ஒருங்கிணைந்த இத்திட்டம் இன்று வரை நிறைவேற்றப்பட்டது.
இவர்களுக்கு எதிரான குழு இலங்கை அரசுடன் சார்ந்து எதிர்த்தால் இவர்களுக்கான ஆதரவு அதிகரித்தது.
கடந்துபோன ஐந்து வருடங்களில் ராஜப்கச பலப்படுத்தப்பட ஈழப் போராட்டம் முழுமையான வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது.
இறுதியாக இன்றுவரை எதிர்காலத்தில் போராட்டத்தை முன்னெடுகக் கூடியவர்களை அடையாளம் கண்டு அழிக்கும் முயற்சியை இந்திய உளவுத்துறை ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானின் ஒற்றராக இந்தியாவில் செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராஜாவை விசாரணைக்கு உட்படுத்த இந்தியாவின் மத்திய புலனாய்வு பிரிவான சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளமை இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதலாம்.
இதனூடாக போராட்டத்தின் முன்னணி சக்திகளைப் போர்க்குற்றவாளிகளாகவோ ஏனைய நாடுகளின் உளவாளிகளாகவோ குற்றம்சுமத்தி கைது செய்ய இந்திய உளவுத்துறை முயற்சிக்கும்.
இரண்டவாதாக ஈழத் தமிழர் தொடர்பான அதிர்ப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் இந்திய உளவுத்துறைக்கு இது ஏதுவாக அமையும்.
இதனைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா விடுதலைப் புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற குண்டைப் போட்டுள்ளார்.
எதிர்வரும் சில வருடங்கள் இவ்வாறான இறுதி அழிப்பின் ஊடாகவே நகர, ராஜபக்ச அரசு தனது நிலைகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும்..
சிறீரா