Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய- இலங்கை (சீபா) வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு

தனியார் முதலீட்டிற்கு உகந்த சூழல் வடக்கிலும் கிழக்கிலும் நிலவுகிறது. என்று ராஜபட்சே அறிவித்த பின்னர் தமிழர்களின் பாரம்பரீய பிரதேசங்களை இந்திய முதலாளிகளின் முதலீட்டிற்காக திறந்து விட்டார். பன்னாட்டு நிதி நிறுவனங்களும் தங்களின் முதலோடுகளை தமிழர் பகுதிகளில் கொட்டத் துவங்கியுள்ளன. இந்நிலையில் வருகிற ஜூன் 8- தியதி ராஜபட்சே இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்புக்கு டில்லியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பயணத்தின் போது ராஜபட்சேவும் இந்தியப் பிரதமர் மன்மோகனும் சீபா

‘ (Comprehensive Economic Partnership Agreement -CEPA) என்னும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறார்கள். இவ்வொப் பந்தத்தின் மூலம் இந்திய முதலாளிகளின் முதலீடுகள் இலங்கையில் குவியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவுடன் இப்படியான ஒப்பந்தங்கள் எதையும் செய்து கொள்ளக் கூடாது என்று கூறி டாக்டர்கள், என்ஜீனியர்கள் உள்பட ஏராளமானோர் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி கோஷமிட்டனர். அதிபரின் அலரி மாளிகை முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழகத்திலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version