Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற டெசோ தீர்மானம்

karunanithi_mதமிழீழ ஆதரவு அமைப்பு என்ற டெசோ கூட்டம் இன்று கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்திய நலனுக்காக சுய நிர்ணைய கோரிக்கையை அழிக்கும் நோக்குடன் கைச்சாத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்டது. இன்றுள்ள சூழலுக்கு எந்தவைகையிலும் பொருந்தாத 13 வது திருத்தச்சட்டம் காலவதியாகிப் போயுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அல்லது கிடப்பில் போடப்பட்டாலும் எந்த மாற்றங்களும் நடைபெறாது. ஆனால் பிரச்சனைகளைத் திசைதிருப்பும் நோக்கோடு 13வது திருத்தச் சட்டத்தை நோக்கி விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் கருணாநிதி தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:1987-ம் ஆண்டு இந்தியா -இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த ஒப்பந்தத்தை எவ்வித திருத்தமுமின்றி ந‌ிறைவேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.8-ம் தேதி டெசோ சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Exit mobile version