Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய இராணுவத்தின் போர்க்குறங்கள் தொடர்பாகக் கருத்தில்லை:மண்டையன் குழு சுரேஷ் பிரேமச்சந்திரன்

SURESH_PREMACHANDRanஇந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிகாக்கும் படையினர் என்ற பெயரில் வடகிழக்கை ஆக்கிரமித்த இந்திய இராணுவம் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தபட்டனர். தமிழ் தேசிய இராணும் என்ற உள்ளூர் இராணுவக் கூலிக் குழுவை இந்திய இராணுவம் உருவாக்கியது.

அப்பாவி இளைஞர்களைப் பலவந்தமாகப் கடத்திய இந்திய இராணுவத் துணைக்குழுவான ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற ஆயுதக் குழு தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்குவதற்குத் துணை சென்றது. இவ்வாறு பலவந்தமாக இளைஞர்களைச் சேர்த்துக்கொவதற்கு தலைமை வகித்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் அசோக் விடுதியில் தலைமையகத்தைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் கைதான இளைஞர்களை அங்கு அடைத்துவைத்தது. பயிற்சிக்கு அனுப்புவதற்கு முன்னர் பிரேமசந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இணைந்துகொள்ள மறுத்தவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் கொலை செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசிய இராணுவத்தை அனாதரவாகக் கைவிட்டு பிரேமச்சந்திரன் குழு இந்திய இராணுவத்துடன் தப்பிச் சென்றதும், அப்பாவி இளைஞர்களைப் புலிகள் கைது செய்தனர். கைதான பலர் பல்வேறு முகாம்களில் புலிகளால் சாரி சாரியாக் கொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் கந்தன் கருணை முகாமில் மட்டும் ஒரு சில மணி நேரங்களுக்குள் 54 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிழக்கில் மட்டும் 300 இளைஞர்கள் வரை கொல்லப்பட்டனர். பொதுவாகக் கிழக்கு மாகாண இளைஞர்களே இவ்வாறான பாதிப்பிற்கு உள்ளாகினர்.

தவிர, புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகளை சுரேஷ் பிரேமச் சந்திரன் தலைமை வகித்த கிரிமினல் இராணுவமான மண்டையன் குழு கொலை செய்திருந்தது.
பின்னதாக மகிந்த ராஜபக்ச மீன்பிடி அமைச்சராகவிருந்த வேளையில் அந்த அமைச்சின் முக்கிய பொறுப்பிலிருந்த பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது பிரபாகரனின் ஆசி பெற்று அதன் முக்கிய உறுப்பினரானார்.

மகிந்த ராஜபக்ச போன்ற இனக்கொலையாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அது மனிதகுலத்தின் அவமானமாகும். மகிந்த ராஜபக்ச போன்று பலர் இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஏனைய நாடுகளிலும் அச்சமின்றிக் கொலைகள் நடத்துவார்கள். வன்னிக் கொலைகளின் சூத்திரதாரிகளான மகிந்த குடும்பம் உலகின் கோரமான கொலையாளிகளுகு முன்னுதாரணத்தை வழங்கியிருக்கின்றது. அவர்களை ஊக்கப்படுத்துகின்றது. இனக்கொலையில் நேரடியாகப் பங்காற்றிய கோதாபய ராஜபக்ச மேற்கு ஏகாதிபத்தியங்களின் துணையோடு தனியார் இராணுவத்தை உருவாக்கியுள்ளார்.ஆனால் மகிந்த ராஜபக்சவின் குற்றங்களின் பின்னால் இந்திய ஆக்கிரமிப்பிற்குத் துணைசென்ற பல கிரிமினல்கள் மறைந்துகொள்வது நியாயமில்லை.

NN

Exit mobile version