Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய இனக்கொலை இராணுவமும் அடிமை கருணாவும்

karunaமகிந்த பாசிஸ்ட்டுக்களின் எழுதப்பட்ட அடிமை போன்று செயற்படும் புலிகளின் முன்னைநாள் கிழக்கு மாகாணத் தளபதி கருணா என்ற விநாயாகமூர்த்தி முரளீதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி புரளியைக் கிளப்பினார். அவரது ஆங்கிலப் பேச்சின் நடுவே அவரது மேன்மை தங்கிய ஜனாதிபதி வன்னியிலிருந்து மக்களை மீட்டதாக தனது விசுவாசத்தைக் காட்டி வாலாட்டினார். தனது பேச்சின் இடை நடுவில் இலங்கையில் தரித்திருந்த இந்திய அமைதிகாக்கும் படை பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகவும் தமிழர்களைக் கொலை செய்ததாகவும் வேறு குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தனது போர்க்குற்றம் தொடர்பான குற்றங்களில் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு இழந்துவரும் செல்வாக்கை மீளமைப்பதற்காக மகிந்த கும்பலே கருணாவின் ஊடாக இத்தகவலைப் வெளிப்படுத்தியது என்பதில் சந்தேகங்கள் இருக்கமுடியாது.

கருணா போன்ற கோமாளி அமைச்சருக்கு இலங்கையில் கூட யாரும் காதுகொடுக்காத நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சு மறுப்பறிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசிடமிருந்து நேரடியாக இத்தகவல் வெளியிடப்பட்டால் அது குறித்துக் பதில் வழங்கலாம் என்றும் வனாந்தரங்களிலிருந்து ஒலிக்கும் குரல்களுக்குப் பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் சாயித் அக்பருதீன் இக் கருத்துக்களை வெளியிட்டார். இந்திய இராணுவம் வட-கிழக்கில் நிலை கொண்டிருந்த 1987 முதல் 1990 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளையும் போராளிகளையும் கொன்று குவித்தது. இலங்கை அரச படைகளுக்கு இணையான இரத்த வெறியுடன் கட்டுப்பாடுகளற்ற இந்திய இராணுவம் மக்களுக்கு எதிராகப் போர் தொடுத்திருந்தது.
ஈழப்போராட்டத்தைச் சிதைத்து அதனை வன்னிப் படுகொலைகள் வரை இந்திய இனக்கொலை அரசும் இணைந்தே நகர்த்தி வந்தது.

இலங்கை அரன் இனக்கொலையிலும் போர்க்குற்றங்களிலும் பங்குவகித்த கருணா இந்திய அரசின் இனப்படுகொலை தொடர்பாகப் பேசுவதால் இந்திய அரசு புனிதமடைந்துவிடாது.
இந்தியாவில் தனது சொந்தமக்களையே பல்தேசிய நிறுவனங்களின் நலன்களுக்காகக் கொன்று குவிக்கும் இந்திய அரசபடைகள் இலங்கையில் பயங்கரவாதம் காக்கும் படைகளாகவே செயற்பட்டன.

Exit mobile version