Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய ஆசியான் ஒப்பந்தமும் விவசாயிகளின் தற்கொலையும்….

 தென்கிழக்காசிய நாடுகளுடன் இந்தயா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது. கடும் வறட்சியையும் தண்ணீர் பற்றாக்குறையையும் நாடு சந்தித்து இந்தியா முழுக்க கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இந்த புதிய ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை மேலும் சூறையாடிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் சுதந்திரதினவிழா கொடியை ஏற்றி வைத்துப் பேசிய கேரள முதல்வர் வி.எஸ், அச்சுதானந்தன்., தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக நாட்டில் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் அதிலும் குறிப்பாக கேரள மாநில விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக் காட்டினார். ண்மையான ஜனநாயக ஆட்சிமுறை என்றால், சர்வதேச ஒப்பந்தம் செய்து கொள்ளும் முன்னதாக மாநில அரசுகளிடம் கலந்துபேசி அதன்பிறகு முடிவு செய்ய வேண்டும். அத்துடன் இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பில் சுதந்திரமான ஜனநாயக நடைமுறை பின்பற்றப்படுகிறது. அப்படியிருக்கும்போது, சர்வதேச ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டால், அது பல்வேறு மாநிலங்களை வெவ்வேறு வகையாகப் பாதிக்கும். எனவே மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமாகும். இது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் சுதந்திரமான ஜனநாயக அரசியல் நடைமுறையாகும்.

நாட்டில் தற்போது விலைவாசி அதிகரித்துக் கொண்டே போகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டை பல்வேறு விஷயங்கள் அச்சுறுத்தி வருகின்றன. நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினை சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. வகுப்புவாத சக்திகளும் நாட்டை பிரித்தாள நினைக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் இத்தகைய முயற்சிகளைத் தனிமைப்படுத்தி, இதுபோன்ற சக்திகள் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம் என்றார் அச்சுதானந்தன்.

அச்சுதானந்தனின் பேச்சுக்கு கடும் கணடனத்தை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள் நாட்டின் வளர்ச்சியை பின்நோக்கித் தள்ள நினைக்கிறார்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளது. இந்நிலையில் கடந்த ஐம்பது நாட்களில் நாடு முழுக்க தொண்ணூருக்கும் அதிகமான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Exit mobile version