இந்த மாத இறுதியில் இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஸ்ணா யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்திய துணைத் தூதரக அலுவலகங்களைத் திறந்து வைக்கவுள்ளார். அதற்கான அவரது இலங்கை விஜயம் உறுதியாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்ட இலங்கையின் பிரதான வியாபாரப் பங்காளிகளாக இந்தியாவு, சீனா, அமரிக்கா ஆகிய நாடுகள் திகழ்கின்றன. இந்திய அரசு இலங்கையில் போருளாதார அரசில சமூக ஆதிக்கங்களையும் செலுத்திவருகிறது. இந்தியக் கலாச்சார மையங்கள், சினிமா விழாக்கள் போன்றன தீவின் சிந்தனையை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேல் மத்தியதர வர்க்கப்பிரிவைச் சேர்ந்த சமூகப் பிரிவினருக்கு இந்தியப் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக்கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இன்று அரச துறையில் பணியாற்றும் சிங்கள மேலணிகள் இந்தியாவில் கல்விகற்ற ஹிந்தி மொழு பேசவல்லவர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாகவே வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்தன. இந்தியத் துணைத் தூதரகங்கள் இந்திய ஆக்கிரமிப்பின் கண்காணிப்பு மையங்கள் போலவே இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.