Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய ஆக்கிரமிபிற்கு எதிரான போராட்டம் : ஈழத் தமிழர்களுக்கும் அழைப்பு

முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கள் பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.

இந்த எதிர்ப்பு நிகழ்வானது, Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகியவற்றின் ஆதரவுடன் நிகழ்கிறது.

முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பிற்கும் புதிய திசைகள் அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு எதிரான சுலோகங்களையும் எதிர்ப்பு நிகழ்வில் முன்வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள்  மதியம் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இலண்டன் ரவல்கர் ஸ்குரில் ஆரம்பமாகி இந்தியத் தூதரகம் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இந்திய ஆக்கிரமிபிற்குகும் இனப்படுகொலைக்கும் எதிரான சுலோகங்களுடன் புலம் பெயர் ஈழத் தமிழர்களை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு புதிய திசைகள் அமைப்பினரும், முற்போக்கு நேபாள சமூகமும் அழைப்பு விடுக்கின்றனர்.

Date & Time: Monday, 15th February 2010 at 12:00 PM

Venue: The rally will start from Trafalgar Square, North Terrace and march towards the Indian Embassy.

முற்போக்கு நேபாள சமூகத்தின் தொடர்பாளரான கே.சி.ரணா, இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்கமானது அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறையாக விரிவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்தியாவே செயற்பட்டுள்ளது என்றும், இலங்கை அரசின் பாசிசத்தை இந்தியாவே ஊக்குவிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது தவிர சென்னையில் 20/02/2010 அன்று ம.க.இ.க வினால் நடத்தப்படும் எதிர்ப்பு நிகழ்விற்கு தமது அமைப்பும் நேபாள மாவோயிஸ்டுக்களும் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் மக்கள் மீதான தாக்குதல் இந்திய எல்லையைக் கடந்து இலங்கை நேபாளம் என்று விரிர்ந்து செல்வதன் ஒரு பகுதியாகவே நேபாள மக்கள் மீதான தாக்குதலும் நோக்கப்பட வேண்டும். இந்திய அதிகாரவர்க்கம் நேபாளத்தை ஒரு காலனி போலவே நடத்தி வருகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக சிறுகச் சிறுக அழிக்கப்படும் நேபாளத்தில் இந்தியா எதை வேண்டுமானாலும் நிகழ்த்தி முடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version