மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் இணைந்து சென்னையில் இன்று நிகழ்த்திய பொதுக்கூடத்தில் பத்தாயிரம் பேர்வரை கலந்து கொண்டனர். தோழர் மருதையன், தோழர் பாலன், தோழர் வரவராவ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பொதுக் கூட்டத்தைத் தொழர்ந்து பத்திரிகயாளர் சந்திப்பும் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வு தொடர்பான ஒளிப்படம் ம.க.இ.க இன் தோழமை இணையமான வினவில் விரைவில் பதியப்படும். வெளி நாட்டில் கல்விகற்றுவிட்டு மக்களுக்குச் சேவையாற்றிய கோபட் கான்டே பயங்கரவாதியா, வெளி நாட்டில் கல்விகற்றுவிட்டு இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ப.சிதம்பரம் பயங்கரவாதியா என தனது உரையின் போது தோழர் மருதையன் கேள்வியெழுப்பினார். பழங்குடி மக்கள் மீதான இந்திய அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளுக்குப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.