Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய அரசே மன்னிப்பு கேள்: பெரியார் திக ஆர்ப்பாட்டம்

சிங்கள அரசுக்கு எதிரான ஐ.நா அறிக்கையின் எதிரொலியாக ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய கொடூரமான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும், துணை நின்ற இந்திய அரசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், இலங்கை மீதான இந்திய வெளியுறவு கொள்கைகளை மாற்ற கோரியும், பன்னாட்டு விசாரணை குழு அமைக்க கோரியும், தமிழ்நாடு முழுவதும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் “பெரியார் திராவிடர் கழகம்” சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சேலம் மாநகரில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கோவையில் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. பொள்ளாச்சியில் நகரச்செயலாளர் காசு.நாகராசன் தலைமையிலும், கரூரில் மாவட்டத்தலைவர் கு.தனபால் தலைமையிலும் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது. போராட்டத்தில் மதிமுக, ஆதித்தமிழர் பேரவை, கொங்கு இளைஞர் பேரவை புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டு இந்திய அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Exit mobile version