தமது பயணத்திற்கு இந்தியாவைத் தளமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்து தஞ்சம் கோரிய அரசியல் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு சடத்திற்குப் புறம்பாக அவலம் மிக்க சூழலில் தடுத்துவைத்துள்ளது. தவிர, இந்திய அரசபடை அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள முனைப்புக்களை மேற்கொண்டுவருவதாகக் கூறிவருகிறது. கடந்த பல தசாப்தங்களாக இந்திய மத்திய மானில அரசுகள் தமிழ் அகதிகளை உள்வாங்கில் அழித்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் அவுஸ்திரேலிய அரசு இந்திய அரசுடன் இணைந்து அகதிகளை மிரட்ட மேற்கொள்ளும் முயற்சிகளைப் புலம்பெயர் அமைப்புக்கள் கண்டித்துள்ளன.
இந்திய அதிகாரிகளுடன் இணைந்த் அவுஸ்திரேலியா மேற்கொள்ளவிருக்கும் இந்த விசாரணை சட்டத்திற்கு உட்பட்டதல்ல என அகதிகளுக்கான அவுஸ்திரேலிய சட்டவல்லுனர்கள் கூறியுள்ளனர். அனாதரவான அகதிகள் மீது இந்திய அவுஸ்திரேலிய அகதிகள் மேகொள்ளும் தாக்குதல்களை எதிர்த்து போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் மத்தியில் இந்த அரசுகள் குறித்த கருத்தை உருவாக்குவதில் புலம்பெயர் அமைப்புக்கள் பங்களிக்க வேண்டும்.