Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய அரசின் மனிதக் கொலைகளும் சீமானும்

இந்திய நீதித்துறை மனிதர்களின் கசாப்புக்கடையாக மாறிவருகிறது. அப்சல் குரு என்ற அப்பாவியைத் துக்கில் போட்டு கொலைசெய்த பின்னர் இப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரப்பனின் கூட்டாளிகள் நான்கு பேரைத் தூக்கில் போடப்போகிறார்.
கர்நாடகாவில் கடந்த 1993-ம் ஆண்டு பாலாறு பகுதியில் வீரப்பன் கூட்டாளிகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையா, பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கு மைசூர் தடா கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 2004-ல் தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தனர். அந்த கருணை மனுக்களை சமீபத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனால் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி உள்ளது. தற்போது வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தனி தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அந்த சிறை வளாகத்திலேயே தூக்கிலிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு தூக்கு மேடை சீரமைக்கப்பட்டு வருகிறது. பெல்காம் சிறையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தூக்கில் போடப்பட்டார். அதன் பிறகு அங்கு யாரும் தூக்கில் போடப் படவில்லை.
இது தேர்தல் காலப் பரபப்பு என்பது ஒருபுறம் இருக்க, இதற்கு சீமான் போன்ற இனவாதிகள் எதிர்ர்புத் தெரிவிக்கிறார்கள். அப்சல் குரு என்ற அப்பாவி தூக்கில் போடப்பட்ட்போது மௌனமானவிருந்த சீமான், நால்வரும் தமிழர் என்பதால் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்கிறார். மனிதாபிமானத்தை இனவாதத்திற்குள் புதைத்த இவர்கள் தமிழர்கள் தவிர யார் கொல்லப்பட்டாலும் கைதட்டி ஆரவரம் செய்வார்கள்.
இவ்வாறு மனிதாபிமானற்ற இனவாதிகளே ஈழத் தமிழர் பிர்ச்சனை குறித்து பேசிவருவதால் ஈழத் தமிழர்களை உலகின் ஏனைய மக்கள் பிரிவுகளிலிருந்து தனிமைப்படுத்தும் உளவு நிறுவனனக்களின் தொழிலை இவர்கள் செய்துவருகிறார்கள்.

அதே வேளை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அலுவலக இணையதளத்திலிருந்து கருணை மனு தொடர்பான பக்கம் நீக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்வது வழக்கம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்களின் நிலை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வந்தது.

மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட தகவல் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 9-ஆம் தேதி அப்சல் குருவின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல் இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை

நீக்கப்பட்ட பக்கத்திற்கு பதிலாக 1958 ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஜானாதிபதியுடன் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்ட பத்திரிக்கையாளர்கள் குறித்த தகவல்கலள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version