இலங்கை ஆட்சியாளர்களின் மேலதிக பண உதவி தொடர்பாக ஏனைய நாடுகளை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ள பின்புலத்தில் நிதியமைச்சர் முகர்ஜியின் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
வன்னியில் இலங்கை இராணுவம் கடும் போரைக் கட்டவிழ்த்து விட்டிருந்த சூழலில் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவிவகார அமச்சராக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருந்தார்.
அவ்வேளையில் பிரணாப் முகர்ஜி இலங்கையில் போர் நிறுத்தத்தைக் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காகவே சென்றிருந்தார் என த் தமிழ் நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.