இந்தியப் பிரதமர் மன்மோகன் விரும்பிய ரெவாரி ஸ்வீட்டை பாகிஸ்தான் பிரதமரும். பாகிஸ்தான் பிரதமருக்குப் பிடித்த அல்போன்சா மாம்பளத்தை இந்தியப் பிரதமரும் பரஸ்பரம் பரிமாறி புதிய திருப்பங்களை ஏற்படுத்தினாலும். பாகிஸ்தான் பிரதமர் அனுப்பிய ரெவாரி ஸ்வீட் கையில் கிடைக்கவில்லை என்று இந்தியா வருத்தப்பட்டதுமான பதிவு ஒன்றை நமது இனியொரு தளத்தில் வெளியிட்டிருந்தோம். https://inioru.com/?p=13396 இப்போது சார்க் மாநாட்டிறாக இந்தியா சார்பில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய குழுவுக்கு தனது அன்புப்பரிசாக மாம்பழப் பெட்டிகளை வழங்கினார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக். மாலிக்கின் திடீர் அன்புப்பரிசு இந்தியாவிலிருந்து சென்ற குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது. வெளிறவுத்துறைச் செயலர் நிலையில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு சார்ந்த செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகை நிருபர்களுக்கும் மாம்பழங்களை வழங்கினார் அமைச்சர். இந்திய தலைவர்கள், அதிகாரிகள், தூதர்கள், பத்திரிகையாளர்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு மாம்பழப் பரிசு வழங்கப்பட்டது. இந்திய குழுவினர்களில் சிலர் மாம்பழம் வாங்காமலே திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படவே, அவர்களுக்கு இந்தியாவிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தனது அலுவலகத்துக்கு மாலிக் உத்தரவிட்டார். அதன்படி வாகா எல்லையில் உள்ள அதிகாரிகளுக்கு இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு அங்கிருந்து தில்லிக்கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு மாம்பழம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாம்பழ அன்பளிப்பு என்பது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் புதிதல்ல. இரண்டுமே அதில் அனுபவப்பட்டவைதான். கடந்த மாதம் பூடானில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியை சந்தித்த பிறகு கிலானிக்கு அல்போன்ஸô மாம்பழத்தை அன்பளிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பி வைத்தார். 1980களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக்கும் மாம்பழ அன்பளிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். 2001ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிக்கு மாம்பழத்தை அன்புப் பரிசாக அனுப்பிவைத்தார் அதிபராக இருந்த பர்வீஸ் முஷாரப். இப்படி மாமபழமும், அல்வாவும், ரெவாரி ஸ்வீட்டுமாக இந்திய, பாகிஸ்தான் ஆளும்வர்க்கங்களின் நாக்குகள் ருசிக்காக அலைகிற அதே நேரத்தில் இவர்களின் கோரப்பிடியில் காஷ்மீர் மக்கள் சிக்கி அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக எப்போதும் இல்லாத அளவுக்கு காஷ்மீரின் வன்முறை ஏற்பட்டதன் விளைவாய் செல்போன் சேவைகள் முற்றிலுமாக செயலிழக்கச் செய்யப்பட்டு பள்ளத்தாக்குப் பகுதியே இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.