டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கைது செய்யப்படுவார் என்ற செய்தி ஒன்று பரவிக் கிடந்தது. சில ஆங்கில ஊடகங்கள் டக்ளஸ் தொடர்பான கிரிமினல் வழக்குகளைத் தோண்டத் தொடங்க, இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த டக்ளஸ் தேவானந்தா –”நான் இந்தியாவுக்கு தற்போது சட்ட விரோதமாக வரவில்லை. உரியச் சட்டப்படி வந்துள்ளேன். நான் இந்தியா வந்துச் செல்ல எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை. அந்தப் பட்டியலில் நான் இல்லை.இந்தியா–இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனக்கும் ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, எந்த வழக்குகளும் என்னைக் கட்டுப்படுத்தாது” என்று கூறினார். என்றாலும், நான் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.