Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா பாலஸ்தீனத்திற்கு 2 கோடி டாலர் நிதி உதவி !

09.10.2008.

பாலஸ்தீனத்திற்கு 2 கோடி டாலர் நிதி உதவி அளிப்பதாக பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்தார். மேலும் பாலஸ்தீனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என்றும் அவர் கூறினார்.

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் 4 நாள் பயணமாக செவ்வாயன்று புதுடில்லி வந்தார். அவ ருக்கு அரசு சார்பில் சிறப் பான வரவேற்பு அளிக்கப் பட்டது. இதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் குடன் அவர் பேச்சு நடத்தி னார். அப்போது மேற்கா சிய நிலவரம் குறித்து அப் பாஸ் விவரித்தார்.

அதன்பின்னர் பாலஸ் தீன அரசு நிர்வாகத்திற்கு பட்ஜெட் நிதிஉதவியாக 1 கோடி டாலர் நிதியும், அந் நாட்டில் வளர்ச்சிப்பணி களை மேற்கொள்ள 1 கோடி டாலர் நிதியும் அளிப்பதாக அறிவித்தார்.

அப்போது, “இறை யாண்மைமிக்க, சுதந்திர மான, ஒன்றுபட்ட பாலஸ் தீனத்தை, இஸ்ரேலுடன் அமைதியாக ஒப்புக்கொள் ளப்பட்ட எல்லைகளுடன் கூடிய பாலஸ்தீனத்தை” நாங்கள் விரும்புகிறோம் என்று மன்மோகன் சிங் கூறினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டில்லி சாணக்கிய புரியில், பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் பரிசாக புதி தாக கட்டித்தரப்படவுள்ள பாலஸ்தீன தூதரக அலுவல கத்திற்கு இரு தலைவர்க ளும் அடிக்கல் நாட்டினர்.

Exit mobile version