Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா பன்றிக்காய்ச்சலுக்கு 14 பேர் பலி.

INDIA-HEALTH-FLU1078 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பன்றிக்காய்ச்சல் இந்தியாவை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நோய்க்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் புனே நகரில் 5 பேரும், மும்பையில் 2 பேரும் பலியாகினர். குஜராத்தில் 2 பேரும், சென்னையில் ஒருவரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நாசிக்கில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஒருவரும் கேரள மாநிலத்தில் ஒருவருமாக பன்றிக்காய்ச்சலுக்கு பலியானதால். இதுவரை இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் முடிந்த அளவுகு சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டாலும். மக்களிடம் பீதி ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை. கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, இந்த கொடியநோய்க்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், 1,154 பேர் பலியானதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரிசோதனை முடிவுகளின் படி

Exit mobile version