இதேவேளை உலகில் இராணுவச் செலவிற்கு அதிகாமாகச் செலவிடும் நாடுகளில் இந்தியா நான் காவது இடம்பெறுகிறது.
இந்தியாவில் உருவாகும் இராட்சத முதலாளிகளையும் அவர்களின் சந்தையையும் பாதுகாக்க பலமான இராணுவத்தை உருவாக்கும் இந்தியா அண்டை நாடுகள் மீது ஆக்கிரமிப்புச் செலுத்துகிறது. இன்றுவரை அரச நிர்வாகங்களே உட்புகாத மக்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் இராணுவம் புகுந்து மக்களை அகதிகளாக்குகிறது.
மேற்கில் அதிகரித்த உற்பத்திச் செலவை எதிர்கொள்வதற்காக இந்தியாவை நோக்கி ஐரோப்பிய அமரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் நகர்கின்றன. இந்தியாவில் உற்பத்திச் செலவின் அளவை அதிகரிக்காமல் பாதுகாக்க அஙகு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அடிமைகளை இந்திய அதிகாரம் பெருக்கி வருகிறது.