Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா நெருக்கடியில் : அதிகரிக்கும் பணவீக்கம்

 
 
 
 
 
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன. காலை வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 274 புள்ளிகளும், நிஃப்டி 73 புள்ளிகளும் குறைந்தன.

ரிசர்வ் வங்கி இந்த நிதி ஆண்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று வெளியிடுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படு‌த்த வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தை கால் விழுக்காடும், வட்டி விகிதத்தை அரை விழுக்காடும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் முன்பேர சந்தையில் டிரைவ்டெரிஸ் ஒப்பந்தம் வரும் வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.

உலக சந்தையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை நேற்று 1 டாலர் அதிகரித்தது. நைஜிரியாவில் பெட்ரோலிய குழாய் அருகே உள்நாட்டு கல‌க்காரர்கள் குண்டு வெடிக்கச் செய்தனர். அத்துடன் ஈரானிலும் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.

இது போன்ற காரணங்களினால் மும்பை, தேசிய பங்குச் சந்தையின் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையை பொருத்தே பங்குச் சந்தையில் இயக்கம் இருக்கும்.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.35 மணி நிலவரப்படி 734 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 983 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 57 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 256.45 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 14,097.66 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 71.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4260.65 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 33.35, சுமால் கேப் 5.68 பி.எஸ்.இ. 500- 79.41 புள்ளி குறைந்தது.

வங்கி, ரியல் எஸ்டேட், நுகர்போர் பொருட்கள் உற்பத்தி, பெட்ரோலியம், வாகன உற்பத்தி பிரிவு குறியீட்டு எண்கள் அதிக அளவு குறைந்து இருந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,631.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,353.71 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நே‌ற்று ரூ.721.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,084.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.628.03 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.456.67 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,932.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63,094.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 40 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 239.61, நாஸ்டாக் 46.31, எஸ் அண்ட் பி500-23.39 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் குறைந்து இருந்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 50.32, தைவானின் தைவான் வெயிட் 248.36, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 23.69, ஹாங்காங்கின் ஹாங்சாங் 556.23, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 41.13, சீனாவின் சாங்காய் காம்போசிட் 71.47, ஜப்பானின் நிக்கி 266.85 புள்ளி சரிந்தது.

Exit mobile version