அன்னிய சக்திகள் மக்களைக் காப்பாற்றத் தயார் நிலையில் உள்ளன என்று மக்களுக்குப் பொய்யான தகவல்களைக் கூறுவதன் ஊடாக மக்களின் போராட்டங்களை அழிக்கும் அணுகுமுறையை ஒடுக்குமுறையாளர்கள் பயன்படுத்துகின்றனர். புலம் பெயர் நாடுகளில் ஐ.நா உம், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் மக்களைப் பாதுகாக்கும் என்று பரப்புரை செய்து போராட்டங்களை அழித்த ஒடுக்குமுறையாளர்களின் .முகவர்கள் போன்றே தமிழ்த் தலைமைகள் செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பங்கிற்கு இந்தியா மக்களைப் பாதுகாக்கும் என்று கூறுகிறது. இன்று மேற்கு ஏகாதிபத்தியங்களும் இந்திய மேலாதிக்க அரசும் இனப்படுகொலையின் பங்களிகள் என நிறுவப்பட்ட பின்னரும் தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் தமிழ் அரசியல் தலைமைகள் கோமாளிகள் போன்று செயற்படுகின்றனர்.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸிடம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என கொழும்பு ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது.இது தொடர்பாக தமக்கு எதுவும் சொல்வதற்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர் சம்பந்தன் பதிலளித்தார்.