Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா சீனா இணையும் BRICS மாநாடு ஆரம்பம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் ‘பிரிக்ஸ்’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
நான்காவது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜிண்டாவ், ரஷ்ய அதிபர் மெத்வடேவ், பிரேசில் அதிபர் தில்மா ரூஸ்செப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேற்று இரவு விருந்து அளித்தார்.
உலகின் அரசியல் பொருளாதார அதிகார மையங்கள் மறு ஒழுங்கமைப்பிற்கு உட்படுத்தப்படும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. சீன – இந்திய அதிகாரங்களின் இணைவு அமரிக்காவின் ஆதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் தெற்காசியாவில் அமரிக்காவின் தலையீடு அதிகரித்துள்ளது.
‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, தலைவர்களின் வரையறுக்கப்பட்ட ஆலோசனை அமர்வுடன் தொடங்குகிறது. அதன்பிறகு பிரதான அமர்வு நடக்கிறது. ‘பிரிக்ஸ்’ வளர்ச்சி வங்கிகள் தொடர்பான உடன்படிக்கைகளில் தலைவர்கள் கையெழுத்திடுகின்றனர். அதன்பின்னர் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்.
அதன்பின்னர் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர். தொடர்ந்து 4 நாடுகளின் அதிபர்களை கவுரவித்து பிரதமர் மன்மோகன்சிங் மதிய விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் முக்கிய மத்திய மந்திரிகள், 5 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டுக்காக வந்திருக்கிற தலைவர்களுடன் தனித்தனியே இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டையொட்டி, பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக மந்திரிகளின் சந்திப்பு டெல்லியில் நேற்று நடந்தது. அவர்கள் உலகப்பொருளாதார நிலைமை குறித்து விவாதித்தனர். உலக பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, பெரிய அளவில் கொள்கை அளவிலான ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
5 நாடுகளுக்கு இடையேயான ஏற்றுமதி, இறக்குமதி, வளர்ச்சி வங்கிகளை ஒன்றிணைக்கும் வர்த்தக மன்றத்தின் நடவடிக்கைகளை தொடங்கி வைத்தனர்.
அடிப்படை மக்களின் வாழ்வின் அவலங்கள் குறித்து இந்த மாநாடுகள் கருத்தில் கொள்வதில்லை.

Exit mobile version