Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டியதில்லை- டலஸ் அழகம் பெருமாள்.

கருணாநிதி தொடர்ந்து மன்மோகனுக்கு கடிதங்களை எழுதுவதும். பதிலுக்கு மன்மோகன் கருணாவுக்கு கடிதம் எழுதுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இந்நிலையில்ல் சமீபகாலமாக ஒரே மாதிரி இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு என்று கடிதம் எழுதுவதை விட வித்தியாசமாக சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டும் என்று கேட்டு வித்தியாசக் கடிதத்தை மன்மோகனுக்கு எழுதியிருந்தார் மன்மோகனும் பதில் கடிதம் எழுதியிருந்தார். மீண்டும் இலங்கைக்கு ஒரு எம்பிக்கள் குழு உல்லாசப்பயணம் மேற்கொள்ளும் என்று தெரிகிற நிலையில் இலங்கை

தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே அது தொடர்பாக ஆய்வுசெய்ய சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.÷இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு பணி தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவில் இருந்து சிறப்புத்தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகனுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
÷இந்நிலையில் இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதனால் சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version