தலிபான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அடிக்கடி தகவல்கள் வருவது பற்றி கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முஸ்லிம்களுடன் நாம் உறவு வைத்துள்ளோம். லஷ்கர் இ- தொய்பாவுடனும் எமக்குத் தொடர்பு இருக்கிறது. லஷ்கர் இ தொய்பா இந்தியாவுக்கு தீவிரவாத அமைப்பாகத் தெரியலாம். ஆனால் எமக்கு அவர்கள் தீவிரவாதிகள் அல்லர்.
இந்திய விமானம் கண்டகாருக்கு கடத்தப்பட்டதில் எமக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. கடத்திய தீவிரவாதிகளுக்கு நாம் ஆதரவும் வழங்கவுமில்லை.
ஆப்கானிஸ்தானில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தியா எம்மை அங்கீகரிக்காதது தவறுதான். ஆனாலும் கூட நாம் இந்தியாவை எதிரியாக நினைக்கவில்லை.
எம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றுதான். அவர்கள் தங்கள் எல்லைப் பிரச்சினைக்காக சண்டையிடுகிறார்கள். இதில் ஆப்கானிஸ்தான் ஒரு நிலை வகிக்கவே விரும்புகிறது.
ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் எம் நாட்டுக்குள் மறைமுக யுத்தத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றன” என்றார்.