இலங்கை நிலைவரம் மிகவும் மோசமானதாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய அரசு இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டு விட்டதாக நேற்று திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கைத் தமிழருக்கு அரசியல் தீர்வுப் பொதியொன்றை கொழும்பு அறிவிக்கவேண்டுமென இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை நிலைவரம் மிகவும் பாரதூரமாகவுள்ளது. தமிழர்கள் கற்பனை செய்ய முடியாத வதைக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியல் நடவடிக்கைகளே இப்போது தேவையாக உள்ளது. அரசியல் தீர்வை கொழும்பு முன்வைக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று பி.ரி.ஐ.செய்திச்சேவைக்கு ராஜா தெரிவித்துள்ளார். புதுடில்லி அக்கறையின்றி இலங்கைத் தமிழரை கைவிட்டு விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.