இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கு இந்தியா தனது உதவிகளை அதிகரித்துள்ளது. இந்திய அரசின் இந்த உதவிகளின் அளவு கடந்த ஆண்டு 12.5 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளதா கத் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிலங்கையிலும் ,மத்திய பகுதிகளிலும் அதிகளவு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் இந்தியா , தற்போது கிளிநொச்சி , வவுனியா , திருமலை , யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு , நுவரெலியா என அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளை விஸ்தரித்து வருகின்றது.
ஆறு பயிற்சி நிலையங்களை அமைத்து வரும் இந்தியா , பேராதனையிலும் ஒரு கல்வி நிலையத்தைத் நிர்மாணித்துள்ளது. இந்தக் கல்விநிலையத்தை திறந்து வைப் பதற்காக அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் வந்திருந்தார்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபி விருத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியா , ஹற்றன் பகுதியில் 150 படுக்கை கள் கொண்ட வைத்தியசாலையையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய அரசின் இந்தத் திட்டங்களுக்கான நிதி உதவிகளை இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வழங்கி வருகின்றது.
வடபகுதியில் விவசாய அபிவிருத்தி நிலையம் ஒன்றை அமைப்பது தொடர் பில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் தற்போது அதனை அமைப்ப தற்கான பரிந்துரைகளை இந்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை பகுதியில் அமைக் கப்படும் அனைத்துலக விமான நியைத்தின் ஒப்பந்தப் பணிகளை பெறுவதற்கு இந் தியா முயற்சிகளை மேற்கொண்டபோதும்இ அரசு அதனை சீனாவுக்கு வழங்கியுள்ளதா கத் தெரிவிக்கப்படுகின்றது.