Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா இரட்டை வேடம் போடுகிறது : து.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா பேசுகையில், இலங்கையில் இன்றைக்கு தமிழர்கள் அமைந்துவரும் துன்பம், உலகில் வேறு யாராவது அடைந்திருப்பார்களா என்று கூறமுடியாது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்டாக கூறப்படும் போர் தமிழர்கள் மீது தொடரப்பட்ட போராகும், இந்திய அரசின் முழு உதவியுடன் நடத்த போராக அது இருந்தது, இலங்கை கேட்டபோதெல்லாம் ஆயுதம் வழங்கியுள்ளது.

இவை அனைத்து தமிழர்களையும் கொல்லப் பயன்பட்டுள்ளது. 2 ராணுவக் கப்பல்களையும் அனுப்பி இந்தியா உதவி செய்துள்ளது அந்த நாட்டினாரலேயே அம்பலமாகியுள்ளது.

இலங்கை தமிழர் நிலையில் இந்தியாவின் இந்த இரட்டை வேடத்திற்கு காரணம் என்ன என்பதை விளக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இந்திய அரசு இருந்துள்ளது என்று குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கையை ஐ.நா.மன்றத்தில் கடுமையாக எதிர்த்த மனித உரிமை பிரதிநிதி நவி பிள்ளை மீது இந்தியா கடுமையாக நடந்து கொண்டது ஏன்? மனித உரிமை பாதுகாப்பில் ஏன் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது.

சுமார் 1 லட்சம் பேர் சொந்த இடங்களுக்கு சென்றுவிட்டதாக கூறும் இந்தியாவிடம் அவர்க்ள உண்மையிலேயே அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தப்பட்டார்களா? என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் ஏதும் இல்லை.

தமிழர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்பதை கண்காணிக்கவும், நிவாரண உதவிகள் கிடைக்கின்றனவா என்று தெரிந்துகொள்ளவும், இந்தியாவிலிருந்து அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழு நேரடியாக சென்று ஆய்வு செய்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Exit mobile version