தவிர, இந்தியா இராணுவரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் போரிற்கு ஆதரவு வழங்கியது என்று மேலும் இந்தச் செவ்வியின் போது தெரிவித்த மகிந்த ராஜபக்ச, எல்லா சாத்தியாமான ஆயுதங்களையும் இந்தியா வழங்கியிருந்தது என்றும் ஏனைய ஆயுதங்களை சீனா, பாகிஸ்தான்,ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் ஏன் அமரிக்காவிடம் இருந்து கூடப் பெற்றுக்கொண்டோம் எனக் கூறினார்.
இந்தியத் துடுப்பாட்டக்காரர் சச்சின் டென்டூல்கார் தனது தனிப்பட்ட வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டதைக் குறிப்பட்ட அவர் இந்திய இலங்கை ஒத்துளைப்பிற்கு உதாரணம் என பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.