உதவி நடவடிக்கைகளின் இந்தியாவின் மேலதிக பங்களிப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்திருக்கும் ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவியல் துறையின் பேராசிரியர் பி.சகாதேவன் அவர்கள்(21.05.09) பி.பி.சி வானொலிக்கு வழங்கிய கருத்துக்கள்:
முக்கியவிடயமாக மீள் குடியேற்றம் பற்றியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 180 நாட்களில் பெரும்பாண்மையான மக்களை புனர்வாழ்வு அமைப்பு அவர்களை மீள்குடியேற்றம் செய்யப்படுவதென்றும் இரண்டாவதாக அரசியல் தீர்வு வரவேண்டுமென்று சொல்லியிருப்பது. இரண்டு விடயங்கள்தான் இருக்கின்றன. இரண்டு விடயங்களை வைத்துப்பார்க்கப்போனால் மீள்குடியேற்றம் பற்றிய கருத்து புதிதாக அமைந்துள்ளது. 6மாத காலத்திற்குள் செய்யவேண்டுமென்பது ஒரு புதிதாக இருக்கிறது மற்றும்படி பெரியளவில்சொல்லும்படி எதுவுமில்லை.
கடந்தகால வரலாற்றை வைத்துப்பார்க்கும்போது ராஐPவ்காந்தி படுகொலைக்குப் பிறகு இந்திய அரசு இலங்கைப் பிரச்சனையில் நேரடியாக தலையிடுவதை தவிர்த்தே வந்தது. தற்போது விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துவிட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்திருக்கும் நிலையில் இந்தக்காலகட்டத்தில் இந்தியா இலங்கை தமிழர் பிரச்சனையில் மேலதிக ஒரு பங்களிப்பை நேரடியாக ஆற்றுவதற்காக தயாராகிக்கொண்டிருப்பதாக நீங்கள் இந்த முன்னெடுப்பை பார்க்கிறீர்களா?
ஒரு மாற்றம் இருக்கிறது தெரிகிறது. ஏனென்றால் புலிகள் தோற்கடிக்கப்படட நிலையில் இந்தியாவின் செயல்பாடுகளில் பலதரப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்கூட. அதனால் தம்மை இதில் முக்கிய புனர்வாழ்வு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுபடுத்திக்கொண்டால் அவர்களுடைய பங்கை இந்தியா செய்கிறது என்று சுட்டிக்காட்டும்படியாக ஒரு நிலைவரும் என்ற கருத்தில் இந்தமாதிரிவிடயங்களில் ஈடுபடுத்திக் கொள்கிறது என்பது தெரிகிறது. ஆனால் எந்தளவுக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வுவரவேண்டுமென்று அழுத்தம் கொடுத்து அதற்கான முக்கியபங்கை வகிக்குமா என்பதை ஒரு சந்தேகக்கூறாக இருக்கிறது. ஒரு விசயத்தை எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கலாம். அரசியல் தீர்வு வேண்டும் தமிழர்களுக்கு உள்ள பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று சொல்லுவதைற்கும் சொல்லுவதை செயல்படுத்துவதில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை.
ஏன் உங்களுக்கு அந்த சந்தேகம் இருக்கிறது?
மக்கள் எதிர்பார்க்கின்ற ஒரு அரசியல் தீர்வு வரவேண்டுமென்றால் அதற்காக பல முயற்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும்.இலங்கை அரசாங்கம் போர் வெற்றிக்குப் பிறகு இந்தியாவை செவி சாய்க்குமா என்பது ஒரு ஐயக்கூறாகவே உள்ளது. இந்தியாவும் அண்டை நாடான இலங்கையை பகைத்துக்கொண்டு ஒரு அழுத்தம் கொடுத்து அதற்கான சில பிரச்சனைகளை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் தெரியவில்லை. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இந்தியா அரசியல் தீர்வு வரவேணுமென்று சொல்லிக்கொண்டிருக்கும். என்னமாதிரியான அரசியல் தீர்வு வரவேணுமென்று கவனத்தில் கொண்டு அதற்கான தகுந்த அழுத்தத்தை கொடுக்குமா என்பது சந்தேகம். 13வது சரத்து ஒரு அரசியல் தீர்வு என்று சொல்லமுடியாது. ஆனால் அதுதான் இந்தியா சொல்லிக்கொண்டிருக்கிறது. 13வது சரத்துத்தான் ஒரு அரசியல் தீர்வுக்கான வழிகூறு என்றால் அதுதான் ஏற்கனவே இருக்கிறதே. புதிதாக என்ன சொல்லப்போகிறார்கள்.
சமீபகாலத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்காலத்தில் இந்தியா கடைப்பிடித்த அனுகுமுறை குறித்து பலவித சந்தேகங்கள் விமர்சனங்கள் கண்டனங்கள் எல்லாம் தமிழர் தரப்பினரிடமிருந்தது வெளிப்பட்டன. அப்படிப்பட்ட சந்தேகங்கள் எழுந்த நிலையில் இந்தியா தற்போதைய புனர்வாழ்வுக்கான நேரடி தலையீடு என்பது உரிய பலனைக் கொடுக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால் யுத்தகாலத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்கை மக்கள் சாவதை தடுக்கவில்லை அப்படிப்பட்ட தருணத்தில் இப்பொழுது புனர்வாழ்வுக்கு பணம் தருகிறோம் நாங்கள் எல்லா வசதிகளையும் செய்கிறோம் என்றால் அவதிப்பட்ட மக்கள் அதை ஏற்றுக்கொள்ளுவதற்கு தயங்குவார்கள்தான். அதில் குறைகூறுவதாக ஒன்றுமில்லை. ஆனால் இந்தியா தன்னுடைய பெயரை எப்படி நிலைநாடடிக் கொள்ளும். மக்களை குடியேற்றம் புனர்வாழ்வு என்பதால் இந்தியாவின் பெருமை நிலைநாட்டப்படப்போவதில்லை. அந்த கசப்புணர்வு இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் இந்தியாவின் அடிப்படைக்கொள்கைகள் தக்கவருத்தத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.