Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவை இன்னும் அதிகமாகச் சுரண்ட அனுமதிக்க வேண்டும் : ஒபாமா

நேரடி அன்னிய முதலீட்டை, இந்தியா தடை செய்யக்கூடாது என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா குறித்து, அதிபர் ஒபாமா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா நேரடி அன்னிய முதலீட்டை தடை செய்கிறது. இதனால், இந்தியாவில், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவதாக, அமெரிக்க வர்த்தகர்கள் என்னிடம் கவலை தெரிவித்துள்ளனர்.
நேரடி அன்னிய முதலீடு, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். உலகளாவிய பொருளாதார மந்த நிலை, இந்தியாவின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது. தற்போதுள்ள உலகப் பொருளாதாரச் சூழலில், இந்தியா மற்றொரு பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்த ஒபாமா, இந்திய மற்றும் உலக பொருளாதாரம், இந்திய-பாகிஸ்தான் உறவு மற்றும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது
கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் உலக நாடுகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், எனது சிறந்த நண்பராக இருக்கிறார்.
அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவருடைய செயல்பாடுகளும், கருத்துகளும் மற்ற நாடுகளுக்கு உதாரணமாக விளங்குகிறது.
அமரிக்கா உள்நாட்டில் தனது பொருளாதாரத்தையே காப்பாற்ற முடியுத நிலையில் இந்தியாவைச் சுரண்டுவதற்கு அனுமதிக்குமாறு கோருவதையும் இதுவரை சுரண்ட அனுமதித்தமைக்காக மன்மோகனைப் பாராட்டுவதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Exit mobile version