இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை இந்திய – சீன இணைவையும் ஆசியப் பொருளாதாரத்தை முன்நிறுத்துவதில் இவ்விரு நாடுகளின் கூட்டையும் எடுத்துக்காட்டியது. இப்போது இவற்றின் இந்த இணைவு சர்வதேச அரசியல் அரங்கிலும் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது. இந்தியப் பயணத்தின் போது ஐ,நா சீர்திருத்தம் குறித்து எதிர் மறையான கருத்துக்களையே முன்வைத்த ஒபாமாவின் கருத்துக்களின் சற்றுப் பின்னதாக சீன அரசாங்கம் இந்தியாவை வெளிப்படையாக ஆதரிடத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நியாயமான மற்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதை சீனா ஆதரிப்பதோடு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்றும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா தெரிவித்துள்ளது.