இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலை இந்திய – சீன இணைவையும் ஆசியப் பொருளாதாரத்தை முன்நிறுத்துவதில் இவ்விரு நாடுகளின் கூட்டையும் எடுத்துக்காட்டியது. இப்போது இவற்றின் இந்த இணைவு சர்வதேச அரசியல் அரங்கிலும் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது. இந்தியப் பயணத்தின் போது ஐ,நா சீர்திருத்தம் குறித்து எதிர் மறையான கருத்துக்களையே முன்வைத்த ஒபாமாவின் கருத்துக்களின் சற்றுப் பின்னதாக சீன அரசாங்கம் இந்தியாவை வெளிப்படையாக ஆதரிடத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நியாயமான மற்றும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதை சீனா ஆதரிப்பதோடு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்றும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா தெரிவித்துள்ளது.
என்று இந்திய மக்கள் ராஜீவ்காந்தியை பிரதமராக தேர்ந்தெடுத்தார்களோ அன்றிலிருந்து இந்திய இராஜ தந்திரம் சரியத்தொடங்கி விட்டது. சுண்டங்காய் இலங்கையே இந்தியாவின் கண்ணில் இன்று விரலைவிட்டு ஆட்டுகிறது. முன்பு ஒருவர் எழுதியிருந்த கடைந்தெடுத்த கழிவுக் கருத்தொன்று இங்கு ஞாபகம்வருகிறது. அதாவது “ஒருவன் வன்புணர்ச்சி செய்யும்போது அதனை எதிர்ப்பதற்கு சக்தி இல்லாவிடில் அதிலுள்ள இன்பத்தை அனுபவித்துவிடு” அப்படித்தான் சீனாவை எதிர்ப்பதற்கு சக்தி இல்லாத இந்தியா, அதன் அணைப்பிலுள்ள இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.
சீனாவும் இந்தியாவும் போர் செய்ய வேண்டும் என்பது தான் கட்டுரையாளரது எதிர்பார்ப்பா?
இந்தியாவினுள் அதை அமெரிக்காவின் ஏவல்நாயாக்கும் விருப்புடையோரின் கை ஓங்கியுள்ளது. ஒபாமாவின் இந்திய வருகையின் நோக்கம் பற்றி முதலில் விசாரித்து விட்டு முடிவுகட்கு வருவோம். செய்திச் சிதறல்களை வைத்து முடிவுகட்கு வருவது பயனற்றது.
எந்த ஆதிக்க சக்திகளிடையிலுமான உறவில் பகையும் உண்டு, நட்பும் உண்டு.
இலங்கையில் இப்போது இந்தியா தனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த முனைப்பாக உள்ளது. அதற்கு உடந்தையாக உள்ளூரில் பல சக்திகள் செயற்படுகின்றன.
சீனாவின் அணுகுமுறை வேறு. சீனா உள்நாட்டு அரசியலில் குறுக்கிடுவதில்லை. இலங்கயில் சீன முதலீடுகள் இனித் தான் தொடங்கவுள்ளன.
இந்த ஆதிக்கச் சமன்பாட்டில் தமிழரின் நிலை ஒரு சிறிய பகுதியாகவே இருக்கும்
நேரடியான ஆயுதக் குறுக்கீடு எங்கிருந்து வரலாம் என்பதை அண்மைய உலக வரலாறு உணர்த்தும். எங்கே என்பது இன்னமும் உறுதியில்லை.
///சீனாவின் அணுகு முறை வேறு!சீனா உள் நாட்டு அரசியலில் தலையிடுவதில்லை///அருமை!அதெப்படி, உங்களால் மட்டும் இப்படியெல்லம் சிந்திக்க முடிகிறது?அரசியல் என்றால் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!பொருளாதாரத்திலிருந்து தான் அரசியலே பிறக்கிறது!எந்த ஒரு நாடு வளரும் நாடுகளுக்கு உதவுகிறோமென்று உள்ளே நுழைகிறதோ அன்று பிடிக்கும் “சனி”அது தான் இலங்கையில் நடக்கிறது!இலங்கையில் சீனா காலூன்றுகிறதேயென்று இந்தியா கவலைப்படவில்லை,தங்களுக்கான பங்கு குறைந்து விட்டதேயென்று தான் கவலைப்படுகிறது!சீனாவிடம் இருக்கிறது,வாரி இறைக்கிறார்கள்!இந்தியாவிடம் இல்லை அல்லது “அவ்வளவு” இல்லை.மேலும் அரசியல் வாதிகள் கூட கொள்கைகளை மாற்றிக் கொள்வதற்கும் இப்படியான உள் நுழைவுகளே காரணம்!பொருளாதார உதவி அல்லது அபிவிருத்திக்கு உதவுதல் என்று வருவோர் பலவந்தமாக எதையுமே திணிப்பதில்லை!அவர்கள் நாட்டு நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுவார்கள்!அண்மையில் பல்கலைக் கழக மாணவர் பிரச்சினையை ஆயுத முனையில் அடக்கியதை சொல்லலாம்!சிந்தித்தீர்களென்றால் தெளிவு பிறக்கும்!சீனா உள் நாட்டு அரசியலில் தலையிடுகிறதா இல்லையா என்பது விளங்கும்!மகிந்தரின் இர்ண்டாவது?!பதவியேற்புக்கு சம்பிரதாயங்களுக்கு அப்பால் சீன உயர் மட்டப் பிரதிநிதியொருவர் கலந்து கொள்ள இருக்கிறாராம்!இப்போது இன்னும் புரிதல் கூடும்!!!!!!!!!!!!!
அரசியல் நன்கறிந்த ஐயாவே, சீனம் என்ன செய்யுமோ செய்யாதோ என்று சொல்ல அடியேனால் இயலாது.
எனினும், ஐயன்மீர் தங்களளவு அரசியல் படியாமல், சீனம் இது வரை என்ன செய்தது, செய்யவில்லை என்று எதையோ எல்லாம் வாசித்து அறிவேன்.
தகவல் தவறாக இருக்கலாம்
என் தகவல் தவறென்றால் கருணை கூர்ந்து ஆதாரங்களுடன் மறுத்தெழுதுங்கள். பணிவுடனும் மகிழ்வுடனும் ஏற்கிறேன்.
நான் சொல்லாதவற்றை எல்லாம் ஐயன்மீர் மறுப்பதானல் அது தங்கள் உயரிய அரசியல் அறிவின் விசாலிப்பு.
அதன் முன், அறியேன் அடியேன் மவுனிப்பதல்லால் என் செய்வேன்!