Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவுக்கு 80 எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்குகிறது.

19.12.2008.

மாஸ்கோ: இந்தியாவுக்கு 80 எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யா வழங்குகிறது. இவற்றின் மதிப்பு 1.5 பி்ல்லியன் டாலர்கள் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

இதுகுறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பெடரல் ராணுவ, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஏஜென்சியின் இயக்குநர் மிக்கயீல் டிமிட்ரியேவ் கூறுகையில், இதுதொடர்பான ஒப்பந்தத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சகமும், ரஷ்யாவைச் சேர்ந்த ரோசோபோரோன் எக்ஸ்போர்ட் நிறுவனமும் டெல்லியில் கடந்த டிசம்பர் 5ம் தேதி கையெழுத்திட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் மெத்வதேவ் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையி்ல இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி எம்.ஐ -17 ரக ஹெலிகாப்டர்களை 80ஐ இந்தியா கொள்முதல் செய்யும். இது ராணுவ பயன்பாட்டுக்கானது. 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

இந்தியப் பாதுகாப்புப் படையினருக்காக இது வாங்கப்படுகிறது.

ஹெலிகாப்டர்களின் விலை மற்றும் அவற்றைப் பயன்படுத்தவுள்ளோருக்கான பயிற்சிக்கான தொகை ஆகியவற்றின் மொத்த மதிப்பு 1.5 பில்லியன் டாலர்கள் ஆகும் என்றார் அவர்.

ரஷ்யாவின் எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பே எம்.ஐ. 17 ஹெலிகாப்டர்கள் ஆகும்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ராணுவ ஹெலிகாப்டர் இது.

இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தொடர்ந்து 700 கிலோமீட்டர் வரை செல்லும் தன்மை வாய்ந்தது.

இதன் கேபினில், 4000 கிலோ எடையுள்ள சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். மேலும், ஹெலிகாப்டருக்கு வெளியே 4500 கிலோ எடையுள்ள சரக்குகளைப் பொருத்தவும் முடியும்.

ஹெலிகாப்டர் கேபினில் 36 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version