Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் நிலை அதிகரிப்பு!

9001இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் நிலை அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க நிறுவனம் ஆர்டிஐ – இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வடகரோலினாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஆர்டிஐ- இன்டர்நேஷனல், பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம் மற்றும் சில அமெரிக்க நிறுவனங்கள் இந்த ஆய்வை பெங்களூரில் நடத்தின. 2005 – 2006ம் ஆண்டுகளில் 16 முதல் 25 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

16 – 25 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்கள் கணவர்களின் அவதூறுக்கு ஆளாகும் வாய்ப்பு 80 சத வீதம் ஆக உள்ளது. திருமணமாகாத பெண்கள் பெற்றோரின் அவதூறுக்கு ஆளாவது மிகவும் குறைவு. நிரந்தர வேலையற்ற கணவர்களின் அவதூறுக்கும், வன் முறைக்கும், ஐயத்துக்கும் ஆளாகும் பெண்களும் இதே வயதினர்தான் என்று அறிக்கை சுட்டுகிறது.

ஆய்வுக்குட்பட்ட பெண்களிடம் ஆய்வுக் குழுவினர் மூன்று முறை சந்தித்து விசாரித்துள்ளனர். பெண்கள் அதிகாரமேற்பதின் சிக்கலான சவால்களை இவ்விசாரணைகள் வெளிப்படுத்தின. பெண்களுக்கு அர்த்தமுள்ள நேர்மையான வேலைகள் கிடைப்பது அதிகரித்து வரும் வேளையில், உழைக்கும் மகளிர் சமுதாயக் சங்கடங்கள் அதிகரித்து வருவதையும் அங்கீகரிக்க வேண்டுமென்று ஆர்டிஐ அமைப்பின் சுனீதா கிருஷ்ணன் கூறுகிறார்.

குடும்பத்தில் பாலியல் ரீதியான பங்களிப்பும் உறவுகளும் துரிதமாக மாறி வரும் நிலை, பெண்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட எதிரடித் தாக்குதலுக்கு இட்டுச்செல்கிறது என்றும் சுனீதா கூறினார். திருமணமான ஆணின் உழைப்பும், சம்பளமும் குடும்பத்துக்கு மட்டுமே என்று சமூகம் எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாவிட்டால் சமூக அதிருப்திக்கு அவர் ஆளாகிறார்.

சமூக அதிருப்தி, ஒரு வகை பற்றாமை உணர்வு, விரக்தி மற்றும் வறுமை போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தங்கள் காரணமாக ஆண்கள் குடும்ப வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் சுனீதா கூறுகிறார். ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 57 சதவீதத்தினர் ஆய்வுக்கு முன்பே குடும்ப வன் முறையை அனுபவித்துள்ளனர். ஆய்வுக்குட்பட்ட இரண்டாண்டு காலத்தில் முன்பு வன்முறையைச் சந்திக்காத 19 சதவீதத்தினர் குடும்ப வன்முறையைச் சந்தித்துள்ளனர்.

குடும்பத்தினர் கூறியவரைத் திருமணம் செய்து கொண்ட பெண்களைவிட காதல் திருமணம் செய்த பெண்கள் இருமடங்கு குடும்ப வன்முறையைச் சந் திக்கின்றனர். சமூக நடை முறைகளை மீறியவர்கள் சந்திக்கும் கொடுமைகளை இவை வெளிப்படுத்துகின்றன.

வறுமையும், பாலியல் நியதிகளும் ஆண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த திட்டங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. அதே போல் பாலியல் வேறு பாட்டு அணுகுமுறை மற்றும் நியதிகளை மையமாகக் கொண்ட திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வன்முறை இல்லாத, பாலி யல் சமத்துவம் உடைய எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சுனீதா கூறினார்.

Exit mobile version