“இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் குற்றப்பரம்பரையாக பார்க்கும் மன நிலை!”
இனியொரு...
பன்மை சமூக அமைப்பைக் கொண்டிருக்கும் இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் குற்றப்பரம்பரையாக பார்க்கும் மன நிலையை வளர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது என தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். ஜீலானி கூறினார்.
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் சனிக்கிழமையன்று மதுரையில் சமூக எழுச்சி மாநாடு நடைபெற்றது.
முதல்நாள் நிகழ்வாக “சமூக வலிமையடைதலும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களும்’’ என்ற தலைப் பில் கருத்தரங்கம் நடை பெற்றது. அமைப்பின் தேசியப்பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீப் தலைமை வகித்தார்.தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.யா முகைதீன் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் எம்.முஹம் மது இஸ்மாயில் கருத்தரங்க நோக்கங்கள் குறித்துப் பேசினார்.
தெகல்கா இதழின் முதன்மை ஆசிரியர் அஜித் சாகி துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. மேலிருந்து கீழ் வரை அதிகார மையத்தின் எந்த மட்டத்திலும் முஸ்லிம்கள் போதிய அளவுக்கு இல்லை. முஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வு அரசாங்கத்தின் அனைத்துத் துறை களிலும் நிலவுகிறது. பத் திரிகைத்துறையில் இருக்கக்கூடிய முஸ்லிம்களைக் கூட தீவிரவாதிகளாகப் பார்க்கும் மனநிலைதான் இங்கு நிலவுகிறது என்பதற்கு பத்திரிகையாளர் இப் திகர் ஜீலானியின் சிறைவாசம் நமக்கு உணர்த்துகிறது என அவர் குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கில் வழக்கறிஞர் தி.லஜபதிராய், எஸ்.எம். ஹிதயத்துல்லா, எஸ்டிபிஐ அமைப்பின் பொருளாளர் எஸ்.எம் ரபீக் அஹமது ஆகியோர் கருத்துரையாற்றினர்.