Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்!

இந்தியாவில் இரண்டாவது அலையே இன்னும் கட்டுக்குள் வராமல் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று வேகம் பெற்ற நிலையில் கடந்த சில நாடகளாக கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால், மீண்டும் கொரோனா எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் பரவத்துவங்குகிறது.கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 254 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 1,206 பேர் உயிரழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 7 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள இந்தியா ஏராளமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version